சென்னையில் எகிறும் கொரோனா… பீதியில் மக்கள்… திணறும் சுகாதாரத்துறை அதிகாரிகள்

0

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தேனாம்பேட்டை மற்றும் அண்ணாநகரில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இன்னும் 15 லட்சம் கொரோனா தடுப்பூசி உள்ளதால் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் கொரோனா 2ஆயிரத்தையும், 7 மண்டலங்களில் ஆயிரத்தையும் தாண்டியுள்ளது என்று தெரிவித்த பிரகாஷ், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2,109 பேரும், அண்ணாநகர் மண்டலத்தில் 2.037 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1,260 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 1,698 பேரும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 1,529 பேரும், அம்பத்தூர் மண்டலத்தில் 1,314 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,708 பேரும், வளசரவாக்கம் மண்டலத்தில் 1,036 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.

அடையாறு மண்டலத்தில் 1,155 பேரும், திருவொற்றியூர் மண்டலத்தில் 462 பேரும், மணலி மண்டலத்தில் 194 பேரும், மாதவரம் மண்டலத்தில் 716 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 849 பேரும், பெருங்குடி மண்டலத்தில் 929 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 443 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரகாஷ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here