`சீராக உள்ளது வடிவேலுவின் உடல்நிலை; விரைவில் டிஸ்சார்ஜ் !’- ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை

0

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நடிகர் வடிவேலு நலமுடன் இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு, தன்னுடைய புதிய படத்திற்காக, இயக்குநர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் லண்டனுக்கு இந்த மாத தொடக்கத்தில் சென்றிருந்தார். அங்கு 10 நாட்கள் தங்கிய பின்பு, தமிழகம் திரும்பிய அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, ஒமிக்ரான் தொற்றுக் கூடிய அறிகுறிகள் இருப்பதாக கூறி, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here