சிவாஜி கணேசனை கவுரவப்படுத்தியது கூகுள் நிறுவனம்!

0

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கூகுள் நிறுவனம் புதிய கவுரவம் ஒன்றை அளித்துள்ளது. டூடிலில் புகைப்படம் வைத்து சிறப்பித்துள்ளது.

மறைந்த பிரபலமான தமிழ் திரைப்பட நடிகரும், ரசிகர்களால் நடிகர் திலகம் என புகழப்படுபவருமாகிய சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு நடிகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இன்று சென்னை அடையாறு மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

மணிமண்டபத்தில் நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின், சந்தித்து பேசினார். கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் சிவாஜி கணேசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் சிவாஜியின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரை கவுரவிக்கும் வகையில் சிவாஜியின் புகைப்படம் கூகுள் டூடிலில் இடம்பெற்றுள்ளது.

உலக அளவில் சிவாஜியை போற்றும் வகையில் கூகுள் இதை வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கடந்த 1928ம் ஆண்டு பிறந்த சிவாஜி கணேசன், செவாலியர் பட்டம் பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் ஆவார். இதுதவிர பல தேசிய விருதுகளை பெற்ற சிவாஜி, கடந்த 2001ம் நம்மை விட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here