சாலையில் திரியும் மாடுகள்..!! விபத்தில் சிக்கும் வாகனங்கள்..!!கண்டுக்கொள்ளுமா நகராட்சி நிர்வாகம்..?

0

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை சாலையில்( ECR ) அதிகப்படியான மாடுகள் சுற்றித்திரிகின்றன இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுவந்த நிலையில் இன்று அதிகாலை இராமநாதபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வந்த அரசு பேருந்து ஒன்று மாடு‌ குறுக்கே வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் முன்னே சிலிண்டர் ஏற்றி சென்றுக்கொண்டிருந்த‌ டெம்மோ மீது மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். கேஸ் சிலிண்டர் வாகனமும் சிறிது சேதத்துடன் தப்பித்தது. இதனால் பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி நடைப்பயணமாக‌ அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டை சென்றார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இது பற்றி அருகில் உள்ளவர்கள் சாலையில் அதிகப்படியான மாடுகள் சுற்றித்திரிகின்றன பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி அதிரை நகராட்சி நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பலரும் தெரிவித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here