`சாந்தி தியேட்டர் சொத்துகளை விற்க தடை விதிக்கணும்!’- நடிகர் பிரபுவுக்கு எதிராக சகோதரிகளின் மனுக்கள் தள்ளுபடி!

0

சொத்துகள் விற்பனை தொடர்பாக நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துகளில் தங்களுக்கு பங்கு தராமல் சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஏமாற்றிவிட்டதால், தங்களுக்கு சொத்துகளை பிரித்து வழக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில், இவர்கள் தரப்பில் சில கூடுதல் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டனர்.

அந்த மனுவில், சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் சொத்துகளை விற்கும் நடவடிக்கையில் ராம்குமாரும், பிரபும் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த பிரதான வழக்குகளின் விசாரணை முடியும் வரை சாந்தி தியேட்டர் சொத்கள், மற்றும் பங்கு விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அப்போது சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து சொத்துகளில் சாந்தி, ராஜவிக்கு சம பங்கு உள்ளது. சாந்தி தியேட்டர் பங்கு விற்பனை பொறுத்தவரை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகின்றது. எனவே இந்த விவகாரத்தில் பிரதான வழக்கு விசாரித்து முடிக்கும் விரை சாந்தி தியேட்டர் சொத்துகள் விற்பனைக்கு இடைக்கால தடைவிதி வேண்டும் என்று வாதாடினார். இதேபோன்று ராம்குமார் மற்றும் பிரபு தரப்பில், சாந்தி தியேட்டர விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் முடிந்துள்ள நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டனர்.

மேலும், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில், சாந்தி தியேட்டர் பங்குள் முழுவம் 2010-ம் ஆண்டே கைமாறி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் கூடுதல் மனுக்கல் மீது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பு அளித்தார். அதில், சாந்தி தியேட்டர் சொத்துகள், மற்றும் பங்கு விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிய சாந்தி மற்றும் ராஜ்வி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here