`சத்யராஜ் அட்மிட்; த்ரிஷா குவாரண்டையன்!’- தமிழ் திரையுலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா

0

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சத்யராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகை த்ரிஷா லண்டனில் உள்ள வீட்டில் தன்மை தனிமைப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இன்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 8000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

சமீபத்தில் தனது நெருங்கிய தோழிகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் 2022 புத்தாண்டு கொண்டாட லண்டன் சென்றார் த்ரிஷா. அங்கு அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்குள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனக்கு கொரோனா தொற்று உறுதியான தகவலை, அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிய போதிலும், புத்தாண்டுக்கு சற்று முன்பு தனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. இருப்பினும் தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் விளைவாக தனக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது லண்டனில் இருக்கிறேன். சில பரிசோதனைகள் முடிந்த பிறகு கொரோனா நெகட்டிவ் வந்ததும் சென்னை திரும்புவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாக கடைபிடியுங்கள்” என்று கூறியுள்ளார்.

அதே போல் நடிகர் சதய்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இயக்குனநர் பிரியதர்ஷன், நடிகர்கள் மகேஷ்பாபு, அருண் விஜய் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் படப்பிடிப்பு தளங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு தளங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here