அதிராம்பட்டினத்தில் திமுக அலுவலகம் கட்டும் இடம் கோவிலுக்கு சொந்தமான தீர்த்த குளம் என்றும் அதில் திமுக கட்சி அலுவலகம் கட்டும் பணியை நிறுத்த வேண்டும் என்றும் பாஜகாவினர் தெரிவித்திருந்த நிலையில் இன்று வட்டாட்சியர் தலைமையில் இந்து அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரி மற்றும் அதிராம்பட்டினம் நிலஅளவையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடம் அளக்கப்பட்டது.

இடம் முழுவதும் அளந்து முடிந்த நிலையில் திமுக அலுவலகம் கட்டப்பட்ட இடம் செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் என நிலஅளவை மூலம் தெரியவருகிறது என்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அவர்கள் கூறி மேலும் இது குறித்து அறநிலையத்துறை மற்றும் கோவில் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.