கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்பு.!

0

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. வேதாரண்யம் வனச்சரக அலுவலர் ஆயுப்கான் தலைமையில் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பில் முதல்கட்டமாக ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி 28-01-2023ம் தேதி வனத்துறை பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் பறவைகள் கண்டறியும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மாலை கோடியக்கரையில் உள்ள 12 பகுதிகளில் பறவைகள் மாதிரி கணக்கெடுப்பு பணியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 29 – 01 – 2023ம் தேதி காலை 6-00 மணி முதல் 11.00 மணிவரையும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

வேதாரண்யம் செய்தியாளர் விக்னேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here