கே.என்.ராமஜெயம் அவர்களின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி, திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு.
அதனைத் தொடர்ந்து திரு.ரவிச்சந்திரன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.சக்கரபாணி அவர்கள், வேளாண் துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மத்திய மாவட்டச் செயலாளர் திரு.வைரமணி அவர்கள், மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு.ஸ்டாலின் குமார் அவர்கள் மற்றும் கழகம் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.