`கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்!’- சென்னையில் நாளை களமிறங்குகிறார் தோனி

0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து, நாளை சென்னை வரும் அவர், பயிற்சியில் 5 நாள்கள் ஈடுபடுகிறார்.

கொரோனா தொற்றால் இந்தியாவில் இந்தாண்டு ஐபிஎல் போட்டி நடத்த முடியவில்லை. ஏப்ரலில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இதற்காக தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே அணி வீரர்கள் நாளை சென்னை வரவுள்ளனர். இதனால் வீரர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கேப்டன் தோனிக்கு ராஞ்சியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொரோனோ பரிசோதனை மாதிரி சேகரிக்கப்பட்டது. பரிசோதனை முடிவு நெகட்டிவ் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தோனி சென்னை வருவது உறுதியாகியுள்ளது.

தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய வீரர்கள் ஆகஸ்ட் 15 முதல் சேப்பாக்கத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். பயிற்சி முடிந்து மீண்டும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து, ஆகஸ்ட் 22- ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வீரர்கள் செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here