கொரோனா அறிகுறியா?- புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

0

கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும். 2 மணி, 4 மணி நேரம் இடைவெளியுடன் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை குப்புறப்படுக்கலாம். கடின உடல் உழைப்பை தவிர்த்து வீட்டில் தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ‘டாக்டர்கள் பரிந்துரைப்படி ivermectin, Azithromycin, ranitidine மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

ivermectin மாத்திரையை (12 மி.கி. ஒரு முறை) 3 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 3 நாள் அஜித்ரோமைசின் மாத்திரை (500 மி.கி.), 5 நாள் வைட்டமின் சி (500 மி.கி.) உட்கொள்ளுங்கள்.

5 நாள் ஜின்க் (50 மி.கி.)5 நாள் ranitidine மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். பாரசிட்டமால் 500 மிகி மாத்திரைகளை ஒரு நாளைக்கு நான்கு முறை உட்கொள்ள வேண்டும்.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் போதிய நீர்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இணை நோய்கள் இருந்தால் அதற்கான மாத்திரைகள் தொடர்ந்து எடுக்க வேண்டும்.

தொடர்ச்சியான காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவமனை செல்ல வேண்டும். கொரோனா தொடர்பான உதவிகளை பெற, 044 25619263, 25384520, 46122300 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here