கொரோனா அச்சம்!- நடிகர்கள் சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் படத்தின் சூட்டிங் நிறுத்தம்

0

நடிகர்கள் சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவில் அதிகரித்து வரும் நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பெரிய நடிகர்களான சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோர் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.

பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழகத்தில்தான் இந்த படப்பிடிப்புகள் நடந்து வந்தன. 100 பேருக்கு மேல் படப்பிடிப்பில் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூட்டிங்கில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படங்கள் அனைத்தும் 50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் சினிமா தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நிலையில், தற்போது பெரிய நடிகர்களின் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here