கொரோனாவில் இருந்து மீண்டார் கனிமொழி!

0

கொரோனா பாதிப்பு குணமடைந்து தி.மு.க எம்.பி கனிமொழி வீடு திரும்பினார். நேற்று கொரோனா பாதுகாப்பு உடையுடன் அவர் தனது வாக்கை செலுத்தினார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றுமுடிந்தது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற பிரச்சாரத்தில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக எம்.பி கனிமொழி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்தநிலையல், அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்கு மாலை 6 மணி முதல் 7 மணிவரையில் பிபிஇ கிட் அணிந்து வாக்கு அளிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆம்புலன்ஸில் சென்னை ஆர்.கே சாலையில் உள்ள வாக்குச் சாவடிக்கு கொரோனா கவச உடையணிந்து வந்த கனிமொழி வாக்களித்தார். பின்னர், ஆம்புலன்ஸில் ஏறி மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். இன்று கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவரை 5 நாள்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வீடு திரும்பிய அவரை, திமுக மகளிரணியினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here