`கூட்டுறவு சங்கத்தை கலைத்துவிட்டீங்க; முறைகேடு செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை?’- தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கேள்வி

0

“கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிதி மோசடிகள் நடைபெற்றதாகக் கூறி தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பை கலைக்க சட்டம் கொண்டுவந்துள்ள தி.மு.க. அரசு, அத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? மாறாக, கூட்டுறவு சங்கங்களை மொத்தமாக தி.மு.க.வினர் கபளிகரம் செய்துகொள்வதற்கே அரசின் இந்த நடவடிக்கை வழிவகுக்கும்.

‘அம்மா உணவகங்களை மூடினால் என்ன?’ என்று சட்டப்பேரவையிலேயே தி.மு.க.வின் மூத்த அமைச்சர் பேசியிருப்பது அக்கட்சியின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. இதன்மூலம், ‘அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்’ என முதல்வர் ஸ்டாலின் முன்பு கூறியிருந்தது வெறும் வெளிவேஷம் என்பது அம்பலமாகியிருக்கிறது. வழிவழியாக வரும் தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளின் தொடர்ச்சிதான் அமைச்சரின் இந்தப் பேச்சு.

ஜெயலலிதா மீதான அரசியல் வெறுப்புணர்வால், அம்மா உணவகங்களை மூடி அவற்றால் பசியாறும் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என தி.மு.க. அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here