குளிர்சாதனப்பெட்டி இல்லாததால் பேராவூரணி காமராஜர் அரசு மருத்துவமனையில் அழுகி வரும் உடல்கள்..!

0

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் காமராஜர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது எங்கு பேராவூரணி சேதுபாவாசத்திரம் ரெட்டவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

பேராவூரணி திருச்சிற்றம்பலம் சேதுபாவாசத்திரம் கடலோர காவல்படை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை தற்கொலை விபத்து ஆகியவற்றில் மீட்கப்படும் உடல்கள் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
மாதத்தில் 20க்கும் மேற்பட்ட உடல்கள் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

தலைதூக்கும் துர்நாற்றம்

இந்த வேத பரிசோதனைக்கூடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை மேலும் பிரேத பரிசோதனை செய்ய கொண்டுவரும் உடல்களை வைக்கக்கூடிய குளிர்சாதன பெட்டி இல்லை இதனால் கொண்டுவரப்பட்டுள்ள உடல்கள் அழுகி வீணாகி துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது பெருச்சாளிகள் உடலை கடித்து உடல் சிதறும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது இதனால் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் குடியிருக்க முடியாத நிலையில் நோய் தொற்று ஏற்படும் அவலமும் நிகழ வாய்ப்புள்ளது. எனவே அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் பேராவூரணி அரசு காமராஜர் மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் உடலைப் பாதுகாக்கும் வகையில் குளிர்சாதன பெட்டி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் மேலும் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வலியுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here