குடும்ப உறுப்பினர்கள் 5 பேர்… ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்… கோவையில் நடந்த நகைச்சுவை

0

குடும்பத்தில் 5 பேர் இருந்தும் ஒரு ஒரே வாக்கை மட்டும் பெற்றுள்ளார் கோவை குருடம்பாளையம் ஊராட்சிமன்ற 9வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கார்த்திக். அவரது குடும்பத்தாரே அவருக்கு வாக்கு செலுத்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக நிர்வாகி, குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் இருந்தும் ஒரேயொரு ஓட்டு வாங்கிய பரிதாபம் நடந்துள்ளது. மனைவிகூட அவருக்கு ஓட்டுப்போடவில்லை. கோவையில் கடந்த 9ம் தேதி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்காக இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், குருடம்பாளையம் 9வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், இங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கார்த்திக், ஒரேயொரு ஓட்டு வாங்கியுள்ளார்.

இங்கு, மொத்தம் 910 வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக சார்பில் போட்டியிட்ட அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றுள்ளார். ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர் கார்த்திக் குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, சகோதரர்கள் என 5 பேர் உள்ளனர். அவரையும் சேர்த்தால் மொத்தம் 6 பேர். இதுதவிர அவருக்கு உறவினர்கள், நண்பர்கள் என பலர் இருக்கலாம். ஆனால் அவர் ஒரு ஓட்டு மட்டும் வாங்கியிருப்பது அந்த பகுதி மக்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே நேரத்தில் அந்த ஒரு ஓட்டும் அவர் போட்டதுதானா? வேறு யாரேனும் தெரியாமல் போட்டனரா? என்று அப்பகுதி மக்கள் நகைச்சுவையாக பேசிக்கொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here