`காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் பெயர் இருக்ககூடாது; உடனே அகற்றவும்!’- டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி

0

“காவல் நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவனங்களின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும்” என காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் உள்ள சில காவல் நிலையங்களில் தனியார் விளம்பரப்பலகைகள் இடம் பெற்றிருப்பது பொதுமக்கள் பார்வையில் தவறான புரிதலை ஏற்படுத்துகிறது.

எனவே, அனைத்து காவல் நிலைய பெயர் பலகைகளில் காவல்நிலைய பெயரைத் தவிர, விளம்பரதாரரின் பெயர்கள் இடம் பெற்றிருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும். அதற்குப் பதிலாக புதிய பெயர் பலகையை வைக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து நன்கொடை வழங்கி சில காவல் நிலையங்களில் பெயர்ப்பலகை வைத்துள்ளன” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here