Tuesday, December 2, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedகாலி மது பாட்டில் திரும்ப வாங்குவதில் சிக்கல் டாஸ் மார்க் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்...

காலி மது பாட்டில் திரும்ப வாங்குவதில் சிக்கல் டாஸ் மார்க் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.

காலி மதுபாட்டில்கள் விவகாரம்:

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்கள் டிசம்பர் 3-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம்.திருச்சியில் இன்று டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

காலி பாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்களைக் கொண்டு சேகரிக்க வேண்டுமென நிர்பந்திப்பதை அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தியும்,
காலிபாட்டில் தனி முகமை அமைக்க வலியுறுத்தியும், வரும் டிசம்பர் 3-ந் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக
தமிழ் நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பின் மாநில அமைப்பாளர் கு.பாலகிருஷ்ணன் திருச்சியில் இன்று அறிவித்துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திருச்சி பிரஸ் கிளப்யில், தமிழ் நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு மாநில அமைப்பாளர் கு.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது டாஸ்மாக்கில் காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் தான் சேகரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
இதற்கு, டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் பல வகைகளில் மறுப்பு தெரிவித்துவருகிறது.
தொழிற்சங்கங்கள் போராட்டம் வாயிலாகவும், முறையான கடிதம் மூலமாகவும், மேலாண்மை இயக்குநரிடம் நேரடியாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளோம்.
அதனை தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகளை முதுநிலை மண்டல மேலாளர்கள் அழைத்து பேசினார்கள். இதில் அனைத்து சங்கத்தினரும் காலி பாட்டில் சேகரம் செய்ய தனி ஒரு முகமை அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார்கள்.
மேலும், பணிபளுவினால் பணியாளர்கள் தினந்தோறும் அனுபவிக்கும் கொடுமையான பணிசூழல்களை சரிசெய்துகொடுக்க டாஸ்மாக் நிர்வாகம் மறுத்துவிட்டது. கடந்த மூன்று நாட்களாக தொழிற்சங்க நிர்வாகிகளை தனிதனியாக அழைத்து பேசி சமாதானம் செய்து பார்த்தார்கள்.
காலி பாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் சேகரித்தால் இன்னும் அடுத்த சில ஆண்டுகளில் பணியாளர்கள் பல்வேறு நோய்தொற்று, மன உளைச்சல் ஏற்பட்டு, பல ஆயிரம் பணியாளர்கள் உயிரிழக்க நேரிடும்.
எனவே தொழிற்சங்கங்களின் பேதமைகளை மறந்து, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தங்களது மாநில நிர்வாகிகளிடம் கலந்துபேசி வரும் டிசம்பர் – 3 ம் தேதி யன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம் காலி பாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்களைக் கொண்டு சேகரிக்க வேண்டுமென நிர்பந்திப்பதை கைவிட வேண்டும். காலிபாட்டில்களை சேகரிக்க தனி முகமை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், வரும் டிசம்பர் 3 – ந் தேதி, தமிழ் நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திட்டமிட்டபடி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். அதில் நாம் தமிழர் தொழிற்சங்கம், இதய தெய்வம் அம்மா தொழிற்சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர் நலச்சங்கம், தமிழ்நாடு மேற்பார்வையாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு எஸ்.சி/எஸ்.டி பணியாளர் சங்கம், டாஸ்மாக் பணியாளர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர் .

இவ்வாறு மாநில அமைப்பாளர் கு.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பேட்டியின் போதுதமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன்,மாநிலத் துணைத் தலைவர் முருகானந்தம்,மாநில பொருளாளர் ஜெய்கணேஷ்.மாவட்டச் செயலாளர் பிச்சைமுத்து,தமிழ்நாடு டாஸ்மாக் மேற்பார்வையாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலமுருகன்,மாநில பொருளாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments