காரில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டிய நடிகர் விஜய்க்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி

0

காரில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டிய நடிகர் விஜய்க்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

நடிகர் விஜய் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த வீடியோவை அடிப்படையாக வைத்து மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். கடந்த 20-ந்தேதி நடிகர் விஜய் பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார். அங்கு வரும்போது அவர் பயன்படுத்திய காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாக சமூக வலைதளத்தில் நபர் ஒருவர் சென்னை போக்குவரத்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் விஐபிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு இதுபோன்ற விலக்கு ஏதும் அளிக்கப்பட்டிருக்கிறதா? இதற்கு அபராதம் விதிக்க முடியாத என்ற கேள்வியுடன் புகார் எழுப்பியிருந்தார். இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here