காதலன் மீது அட்டாக்… காதலி கூட்டு பாலியல் பலாத்காரம்… மைசூர் சாமுண்டேஸ்வரி மலையில் தமிழர்களால் நடந்த கொடூரம்

0

மைசூரு சாமுண்டி மலைப்பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ பட்டம் படித்து வந்த 22 வயது இளம் பெண், தனது நண்பருடன் சாமுண்டேஸ்வரி மலைப்பகுதிக்கு சென்றார். இயற்கை காட்சிகளை சுற்றிப்பார்த்த இருவரும் மாலையில் பைக்கில் வீட்டிற்கு திரும்புவதற்காக மலைப்பகுதியில் இறங்கி வந்து கொண்டிருந்தனர். தப்பிலினள்ளி பகுதியில் வந்தபோது குடிபோதையில் அந்த வழியாக எதிரே வந்த 6 பேர் கும்பல், அவர்களை வழிமறித்து தாக்கியது. வாலிபரை அந்த கும்பல் கல்லால் தாக்கியதில் மயங்கி விழுந்தார்.

பின்னர், அந்த கும்பல் மாணவியை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தது. இதில், அப்பெண் மயக்கம் அடைந்தார். நள்ளிரவு அந்த வழியாக சென்றவர்கள் வாலிபர் மயங்கி கிடந்ததை பார்த்து மீட்டனர். பின்னர்தான், கூட்டு பலாத்காரம் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனே, இது குறித்து ஆவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் செல்வதற்குள், அப்பகுதியில் இருந்தவர்கள் இளம் பெண் மற்றும் வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா எல்லையில் கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த குற்றவாளிகள் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இவர்கள் 5 பேரும் தமிழகத்தின் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும் அதில் ஒருவர் 17 வயது சிறுவன் என்பதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

கைதான 5 பேரும் கூலித் தொழிலாளர்கள் என்றும் இவர்கள் அடிக்கடி வேலைக்காக மைசூர் சென்று வருவார்கள் என்றும் தெரியவந்துள்ளது. கைதான் 5 பேரில் 4 பேர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேயூரை சேர்ந்தவர்கள். ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரத்தை சேர்ந்த பூபதியையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகள் 6 பேரும் கார்பெண்டர், எலெக்ட்ரீஷியன், ஓட்டுநராக வேலை செய்து வருகின்றனர்.குற்றவாளிகள் 6 பேரில் தலைமறைவான எஞ்சிய ஒருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here