காசோலை மோசடி புகாரில் வங்கி முன்னாள் மேலாளருக்கு சிறை தண்டனை. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

0

ஐந்து லட்ச ரூபாய் காசோலை மோசடி புகாரில் பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் மேலாளருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை. திருவையாறு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா அகரைப் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கௌதமன் மனைவி புனிதவதி. இவர் திருநெல்வேலி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி வந்த மாரிமுருகன் என்பவருக்கு கடனாக ரூபாய் 5 லட்சம் வழங்கியுள்ளார். மாரி முருகன் பணத்தை திருப்பி தராமல் இழுத்தடிப்பு செய்துள்ளார். அப்போது கடனுக்காக அவர் வழங்கிய காசோலையை வங்கியில் செலுத்திய புனிதவதி. காசோலையில் பணம் இல்லாததால் திரும்பி வந்ததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தார். இதுகுறித்து திருவையாறு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2018ல் வழக்கை தொடுத்தார். வழக்கு விசாரிக்கப்பட்டு நீதித்துறை நடுவர் ஹரிராம் தற்போது பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் மேலாளர் மாரிமுருகன் குற்றம் சாட்டப்பட்டவர் என்றும், மோசடியில் ஈடுபட்ட காரணத்திற்காக அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், கடல் தொகை ரூபாய் 5 லட்சத்தையும் வழங்க வேண்டும் என்றும், பணத்தை வழங்கவில்லை என்றால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.வங்கி மேலாளர் மாரிமுருகன் தற்போது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here