கவிழ்ந்தது நாராயணசாமி அரசு!- புதுச்சேரியில் அடுத்து நடக்கப் போவது என்ன?

0

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததாக பேரவையில் சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து, ஆளுநரை சந்தித்து முதல்வர் பதவியை நாராயணாசாமி ராஜினாமா செய்தார். ஆட்சி அமைப்பது குறித்து கட்சி தலைமையிடம் முடிவு செய்வோம் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூடியது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் நாராயணசாமி, 4 ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் தற்போது அஸ்திரங்களை எடுத்துள்ளன. மாநில பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை 95 சதவிகிதம் நிறைவேற்றி முடித்திருக்கிறோம். மாநிலத்தின் வருமானத்தை குறைக்க வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டினார்கள். புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. எவ்வளவு இக்கட்டு வந்தாலும் புதுச்சேரி மக்களுக்காக இரவு பகல் பாராமல் போராடினோம். கிரண்பேடி அளித்த நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது” என்று கூறினார்.

-Advertisements-

இதையடுத்து, நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் நாராயணசாமி உள்ளிட்டோர் பேரவையில் இருந்து வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து, துணை நிலை ஆளுநர் தமிழிசை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்வதாக, துணை நிலை ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். முடிவு செய்ய வேண்டியது ஆளுநர்தான். நியமன எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். என்ஆர்காங்கிரஸ், அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்” என்று கூறினார்.

அரசு பெரும்பான்மையை இழந்ததால் புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி.

-Advertisements-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here