`கள்ளக்காதல் கொலையில் சென்னை நம்பர் ஒன்!’- அதிர்ச்சி புள்ளி விவரம்

0

கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொலைகளில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளதாக அதிர்ச்சி புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

தேசிய குற்றப் பதிவு பணியகம் பகிர்ந்த சமீபத்திய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 2019ம் ஆண்டில், சென்னையில் கள்ளக்காதல் காரணமாக மொத்தம் 28 கொலைகள் நடந்து உள்ளன. இது 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 19 பெருநகரங்களில் மிக உயர்ந்தது.

மேலும் சென்னையில் சாதாரண தகராறு காரணமாக 90 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மேற்கூறியவற்றில் இரண்டாவது மிக உயர்ந்தது ஆகும். இதில் டெல்லி 125 வழக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

வயதானவர்கள் படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் தமிழகம் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2019ம் ஆண்டில், இதுபோன்ற 117 வழக்குகள் மாநிலத்தில் பதிவாகியுள்ளன. இதற்கு முன் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 209 வழக்குகள் உள்ளன.

தகராறில் 90 கொலைகளும், கள்ளக்காதல் காரணமாக 28 கொலைகளும், குடும்ப தகராறு காரணமாக 60 கொலைகளும், குடும்ப தகராறில் 60 கொலைகளும் சிறிய தகராறில் 34 கொலைகளும், தனிப்பட்ட பகை காரணமாக 52 கொலைகளும் நடந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here