திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து பா.ம.க.மாவட்ட செயலாளர் பி.கே.திலிப்குமார் தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அண்ணா சிலை அருகில் உள்ள அரசு மதுபானக் கடை , தேவதானம் அருகில் உள்ள அரசு மதுபான கடை ஆகிய கடைகளில் காவல்துறை பாதுகாப்புடன் இரவு விடிய விடிய. பார்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரவு 10 மணிக்கு மேல். சட்டத்திற்கு புறம்பாக. செயல்படுவதை கண்டித்து. பாட்டாளி மக்கள் கட்சி. பொதுமக்களை திரட்டி. இரவு 10 மணிக்கு மேல். செயல்படக்கூடிய. பார்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறுவது சம்பந்தமாக தெரிவிக்கிறோம்.உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மாவட்ட அமைப்பு செயலாளர் எழிலரசன் . மாவட்ட துணை செயலாளர் வினோத்.ஆனந்த் தினேஷ் குமார்.கண்ணன்.ஏர்போர்ட் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.