`கர்ணன் வெடிக்க காத்திருக்கும் எரிமலை!’- தனுஷை புகழும் ரசிகர்கள்

0

தனுஷ் நடித்த, மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் இன்று வெளியானது.

நாட்டில் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு உள்ளது. வருவாய் பாதிப்புகளையும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மொத்தமுள்ள 2021 திரையரங்குகளில் நாளை முதல் மால்களில் உள்ள தியேட்டர்கள் மற்றும் தனித்து இயங்கும் தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே உட்கார அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மாரி செல்வராஜ் இயக்கிய நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் இன்று வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவிப்பு வெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் நேற்று தனது டுவிட்டரில், சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின்படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று எஸ்.தாணு பதிவிட்டுள்ளார்.

இதன்படி, கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி இன்று திரைக்கு வந்துள்ளது. இதனால், காலையிலேயே தியேட்டர்கள் முன் திரண்ட ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

திரையரங்குகள் முன் வைக்கப்பட்டு உள்ள பல அடி உயர கட் அவுட்டில் இருந்து மலர்களை ரசிகர்கள் தூவினர். இதனை கீழேயிருந்து ரசிகர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படங்களாக எடுத்தும் சென்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் திரையரங்குகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள். “கர்ணனுக்கு 5 நட்சத்திரங்கள். படத்தின் மீதான ஹைப் உண்மையானது. வர்க்கப் பிளவு மற்றும் ஒருவரின் அடையாளத்திற்காக போராடுவதைப் பற்றி மிகவும் சக்திவாய்ந்த படம். படத்தின் முடிவில், நீங்கள் உள்ளுக்குள் நடுங்குவீர்கள். உங்களுக்கு வார்த்தைகள் வராது. மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் பல ஆண்டுகளாக நினைவில் கொள்ளும் வகையில் ஒரு படத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள்”

”கர்ணன்: தனுஷின் அழகு. அவர் தன்னை சுற்றியுள்ள சாதாரண கிராம மக்களுடன் மிக எளிதாக கலக்கிறார். அவரது மெலிதான இளம் தோற்றத்திற்கு அடியில், கர்ணன் வெடிக்க காத்திருக்கும் ஒரு எரிமலையாக தெரிகிறது. அனைத்து துணை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். வி கிரியேஷன்ஸ் பெருமை கொள்ளும் தருணம்”

“உட்ராதீங்க யப்போவ்’ பாடலுக்கு ஃப்ளாஷ் லைட். தலைவா படம் வெறி”

“கர்ணன் பிரமிக்க வைக்கும் படம்”

“கர்ணன் உங்களுக்குள் செல்ல சிறிது நேரம் ஆகும், ஆனால் சென்றவுடன், அது மிகவும் மிருகத்தனமான உருவத்தின் காரணமாக இடைவிடாமல் மாறுகிறது. மாரி செல்வராஜ் ஒரு தேசிய புதையல். அவரையும் படத்தையும் விரும்புங்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டும்”

“கர்ணன் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் “மாஸ்டர் பீஸ்” – தனுஷ் கரியரில் சிறந்த திரைப்படம்!

5-க்கு 5 மதிப்பெண். கண்டிப்பாக பார்க்க வேண்டும்! சொல்ல வார்த்தைகளே இல்லை! நிச்சயமாக மற்றொரு தேசிய விருது கிடைக்கும்! ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுப்பது ஒரு கலை என்றால், தனுஷ் அதில் பிக்காசோ! இனிமேல் தனுஷ்க்கு ‘ஜீரோ’ ஹேட்டர்ஸ் இருப்பார்கள்” என்று ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here