`கடந்தாண்டு ஸ்மார்ட்போன்; இந்தாண்டு ரூ.1000 பரிசு!’- மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசு பள்ளி தலைமையாசிரியர்

0

அரசு பள்ளியில் சேரும் மாணவ மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி அசத்தி வருகிறார் தலைமையாசிரியர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பள்ளியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஊக்குவிக்க தலைமையாசிரியர் ரூபாய் 1000 வழங்கி வரும் சம்பவம் பொதுமக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, கொரோனா இரண்டாவது அலை கணிசமாக குறைந்து வரும் சூழ்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது.

படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி

இதனால் கடந்த 14ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீதம் மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு உண்டு என்ற அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பள்ளியில் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பணம் வழங்கி வருகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 2021-2022 கல்வியாண்டிற்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது. இப்பள்ளியில் புதிதாகச் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமையாசிரியர் ஜெயக்குமார் என்பவர் தனது சொந்த பணம் ரூ.1000-யை வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு தலைமையாசிரியர் ஜெயக்குமார், மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கினார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here