ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம்!- அதிமுகவில் நடப்பது என்ன?

0

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கி உள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தைக் கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவால் தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகக் கூறித் திருநெல்வேலியில் நேற்று அக்கட்சி தொண்டர்கள் பெயரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதிமுக மானூர் பகுதி தொண்டர்கள் என்கிற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களுடன் “அதிமுக கட்சி செயல்பாடுகளில் மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ செய்யாதே. அவ்வாறு செய்ததால் தான் தேர்தலில் தோற்றுப்போனோம். இனிமேலும் தொடர்ந்தால் தலைமைக் கழகத்தை முற்றுகையிடுவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொண்டர்கள் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிய நிலையில் இன்று எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுக பொறுப்பாளர்கள் என்ற பெயரில் எடப்பாடிக்கு ஆதரவாக ஓ.பன்னீர் செல்வம் போட்டோவுடன் நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடியை பழனிசாமியை தேர்வு செய்த எம்.எல்.ஏகளுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here