கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமை பண்ணை அமைத்து குடைமிளகாய் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். ஓசூர் அருகே அமைந்துள்ள தாசரப்பள்ளி கிராமத்தில் கோபால் ரெட்டி மற்றும் அவரின் மகன் அக்சய் ஆகியோர் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பசுமை குடில் அமைத்து சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் குடைமிளகாய் சாகுபடி செய்கின்றனர், அவர்களிடம் உரையாடும் பொழுது தமிழக அரசு பசுமை பண்ணை குடில் அமைக்க மானியம் தருவதாக தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் குடைமிளகாய் சாகுபடியில் பெரிய அளவில் லாபம் இல்லாத நிலையில் தற்பொழுது அந்த நிலைமை சற்று மாறியுள்ளதாக தெரிவித்தனர். தாசரப்பள்ளி கிராமத்தில் ஏற்றுமதி செய்யப்படும் ரோஜா மலர்கள், பலவகையான அலங்கார பூக்கள், பீன்ஸ், கேரட், முள்ளங்கி, கொத்தமல்லி, முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்ற பல வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு தகுந்த உதவிகளை செய்தால் அயராமல் உழைக்கும் விவசாயிகளின் வாழ்வும் வெளிச்சம் பெறும். மேலும் இயற்கை எழில் சூழ்ந்த தாசரப்பள்ளி கிராமத்திற்கு வேளாண் துறையில் பயிலும் மாணவ, மாணவிகள் வருகை தந்து வேளாண் சம்பந்தமான அனுபவ பாடத்தை கற்றுத் தர உதவிகள் செய்வதாக திரு.கோபால் ரெட்டி மற்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். அரசியல் டைம்ஸ் குழுவினருடன் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஓசூர் மாநகரத் தலைவர் பவுல்ட்ரி சோலைராஜ், மாநகர செயலாளர் கிருபானந்தம், மாநகர பொருளாளர் குருசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.
ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர்