விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆகஸ்ட் 31 அன்று ஓசூர் பகுதி முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் ஓசூர் சுற்றியுள்ள நீர் நிலைகளான கெலவரப்பள்ளி அணை, தர்கா ஏரி, ராமநாயக்கன் ஏரி, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் ஆகியவற்றில் கரைக்கப்பட்டன.

ஓசூர் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது, இந்த விநாயகர் விழாவில் இந்து முன்னணி, தமிழ்நாடு விசுவ இந்து பரிசத், அனுமன் சேனா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் பிற மாநில பொதுமக்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விநாயகர் கரைப்பு ஊர்வலத்தில் குடும்பம் குடும்பமாக பங்கேற்று மகிழ்ச்சி அடைந்தனர். இந்து முன்னணி சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிஜேபி மாநில பொதுச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, மாநிலத் துணைத் தலைவர் நரேந்திரன், பாஜக மாவட்ட தலைவர் நாராயணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோரும் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிசத் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிறுவனர் கோபால் ஜி, மடாதிபதிகள் மற்றும் இந்து இயக்கங்களை சார்ந்தவர்கள் விளக்க உரையாற்றினார். மாலையில் பெய்த கன மழையை பொருட்படுத்தாமல் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களின் மேற்பார்வையில் 1500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜிபி.மார்க்ஸ்
செய்தியாளர்