கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட பொதுக்குழு பிப்ரவரி 02 அன்று கிருஷ்ணகிரி AKK மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும் தலைமை நிலைய செயலாளருமான முகமது ரஷீத் அவர்களும் தொழிற்சங்க மாநிலத் தலைவர் முகமது ஆசாத் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவராக அஸ்கர் அலி, பொதுச்செயலாளராக JKB. ஜாவித் பாஷா, மாவட்ட துணைத் தலைவர்களாக
A.S.பக்ருதீன், மாவட்ட அமைப்புச் செயலாளராக A.கலீல், மாவட்ட செயலாளராக
M. ஜெயக்குமார், மாவட்ட பொருளாளராக
S.காதர் பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக
H.சதாம் உசேன் அவர்களும் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர்.
M. நந்தகுமார்
செய்தியாளர் கிருஷ்ணகிரி