`எம்எல்ஏக்கள் தவிர யாருக்கும் அனுமதியில்லை!’- ஜுன் 14ல் கூட்டத்தை கூட்டிய ஓபிஎஸ், ஈபிஎஸ்

0

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 14ம் தேதி நடைபெறும் என கூட்டாக அறிவித்துள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ், தலைமைக் கழக வளாகத்துக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்று கூறியுள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அ.தி.மு.க 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு எதிர்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அ.தி.மு.கவில் மோதல் போக்கு நிலவியது. இறுதியில் ஓ.பன்னீர் செல்வத்தை சமாளித்து எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னரும், இருவரும் தனித்தனியே அறிக்கைகளை வெளியிட்டுவந்தனர். இதற்கிடையில், மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி மட்டும் ஆலோசனையில் ஈடுபட்டார். நேற்று, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திருநெல்வேலியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த ஜனவரி 21-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்தநிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அக்கட்சித் தலைமை அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 14-ம் தேதி சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் எம்.எல்.ஏ அடையாள அட்டையுடன் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

14-ம் தேதியன்று தலைமைக் கழகத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற இருப்பதால், கொரோனா காரணமாக அன்றைய தினம் கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் தலைமைக் கழகத்துக்கு வருவதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தலைமைக் கழக வளாகத்துக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here