என்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது சமூக ஆர்வலரை தாக்க முயற்சி செய்த திருச்சி ஒப்பந்தக்காரர் திருக்குமரன் ….கூட்டுக் கொள்ளையில் ஈடுபடும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

0

திருச்சியின் பல சமூக அவலங்களை வெளிப்படையாக எதிர்த்து வருபவர் சமூக ஆர்வலராகவும் பசும்பொன் மக்கள் முன்னேற்றக் கழக தலைவராகவும் இருப்பவர் அல்லூர் சீனிவாசன் என்பவர் இவர் துணிச்சலாக அனைத்து வித பிரச்சனைகளையும் எதிர்கொள்ள கூடியவர் இந்நிலையில்…திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் குடமுருட்டி-ஜீயபுரம் சாலை விரிவுபடுத்தும் பணி நடக்கிறது!55கோடி மதிப்பீட்டில் நடைபெறும் இந்த திட்டத்தில் தடுப்பு சுவர் கட்டாமலேயே சாலை அகலப்படுத்தும் வேலை நடைபெறுகிறது! 

அலுவலகம்


இதில் முறைகேடுகள் குறித்து திட்ட நகலை பெற வேண்டி சமூக ஆர்வலர் அல்லூர் சீனிவாசன் திருச்சி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமாரிடம் பேச அவர் மாலை 6-00 மணிக்கு வர சொல்லவே அதன் படி அலுவலகம் சென்று கோட்ட பொறியாளர் வடிவேலிடம் பேசி கொண்டிருந்த போது உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார் தூண்டுதலி்ன் பேரில் ஒப்பந்தக்காரர் திருக்குமரன் உள்ள நுழைந்து“நான் கோடி கணக்கில் முதல் போட்டு முதலமைச்சர் முதல் அதிகாரிகள் அத்தனை பேருக்கும் கப்பம் கட்டி வேலை செய்து வருகிறேன்.என்னை பற்றி பத்திரிகை களில் பேட்டி கொடுத்து இருக்கிறாய்!உன்னை போட்டு தள்ளி விடுவேன் என்று மிரட்டிவிட்டு இன்னும் 10 நிமிடத்தில் உன்னை என்ன செய்கிறேன் பார்! என்று சத்தம் போட்ட படி வெளியே சென்றார். வெளியே வந்த போது 25பேர் ஆயுதங்களுடன் தாக்க முயற்சி செய்ய,நான் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரவே காவல்துறை அதிகாரிகள் வந்தவுடன் எல்லோரும் தப்பி ஓடி உள்ளனர்..

உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார்

இது குறித்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அல்லூர் சீனிவாசன் இதில் ரவிக்குமார் பெயரும் இருப்பதால் திருக்குமரன் மூலம் பொய் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்!இது குறித்து விசாரணை யில் இறங்கிய போது,திருக்குமரனும் ரவிக்குமாரும் குளித்தலை யில் ஒரு பெண்ணை வைத்திருப்பதும் அதனால் தான் நெடுஞ்சாலை ஒப்பந்த ங்களில் கூட்டுக் கொள்ளை அடிப்பதும் தெரிய வந்துள்ளது.
2014-ம் ஆண்டு இதே சாலை அகலப்படுத்தும் திட்ட மதிப்பீட்டில் 8 கோடி வேலையையும் பெயரளவுக்கு வேலை செய்து விட்டு 6 கோடி அளவுக்கு பணத்தை அப்போதைய ஒப்பந்தக்காரர் ரங்கசாமி யுடன் சேர்ந்து 55:45%என்ற அளவில் பங்கு போட்டுக் கொண்ட செய்தி அறிந்து அதை அம்பலப்படுத்தி யதால் தான் அல்லூர் சீனிவாசனை திட்டமிட்டு வரவழைத்து தாக்க முயற்சி செய்து ள்ளனர்.இவர்கள் இருவரும் அனைத்து ஒப்பந்தக்காரர் களிடமும் 20%வரை கமிஷன் வசூல் செய்து அதை நெடுஞ்சாலை துறை யை கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி யின் சிறப்பு உதவியாளர் செல்வராஜ் வசம் கொடுத்து வருகின்றனர்.
இதில் 6%அளவுக்கு கமிஷன் எடப்பாடி க்கு தெரியாமல் செல்வராஜ் க்கு செல்கிறது,ஆண்டுக்கு 12 கோடி அளவுக்கு பணத்தை கபளீகரம் செய்து திருச்சி-சேலம் ஆகிய மாவட்டங்களில் திருக் குமரன் ,நான் எடப்பாடி ஆள் என்று சொல்லி,நான் பினாமி என்று அதிகாரிகளை மிரட்டி வருகிறார்.மேற்கண்ட வேலையை எம் சாண்ட் மூலம் தான் செய்ய வேண்டும்! ஆனால் காவிரி ஆற்றில் மணலை திருட்டுத்தனமாக அள்ளி அரசின் அம்மா சிமெண்ட் பயன்படுத்தி கொள்ளை அடிப்பது தெரிந்த பொதுப் பணித் துறை அதிகாரி களை மிரட்டி இருக்கிறார் திருக் குமரன்!

சாலை அமைக்கும் பணி தரமானதாக இல்லை என்று குற்றம் சாட்டி ய,ஊராட்சி தலைவர்,ஒன்றிய குழு உறுப்பினர் களை மிரட்டி இருக்கிறார் திருக் குமரன்! சாலை பயனீட்டாளர் சங்க தலைவர் சமூக ஆர்வலர் அய்யாரப்பன் அவர்களை அல்லூர் கீழத் தெரு வை சேர்ந்த குமார் என்பவர் மூலம் அடித்து உதைத்து ள்ளனர்.இது குறித்தும் புகார் ஜீயபுரம் காவல் நிலையத்தில் கொடுக்க ப்பட்டுள்ளது!திருக் குமரன் செய்யும் அடாவடித்தனம் கண்டு அந்த பகுதி மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்,அதிமுக வலுவாக உள்ள இந்த தொகுதியில் இது எதிரொலிக்கும் என்று புலம்பு கின்றனர் பெயர் குறிப்பிட விரும்பாத ரத்தத்தின் ரத்தங்கள்!
இது குறித்து அல்லூர் சீனிவாசன் நம்மிடம்,பத்திரிகை யாளர்களையும்,பேட்டி கொடுக்கும் சமூக ஆர்வலர்களையும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கூறுவது வாடிக்கையாகி விட்டது!கொலை செய்து விடுவதாக மிரட்டுவதும் நடந்து கொண்டிருக்கிறது! ஆனால் அரசு அலுவலகத்தில் ரவுடிகள் நுழைந்து மிரட்டுவது இதுவே முதல் முறை!எனவே எனது புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! நெடுஞ்சாலை துறை அலுவலகம் கொடுஞ் செயல்கள் செய்யும் ரவுடிகள் கூடாரமா?என்பது தான் எனது கேள்வி?”என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here