எங்கள் பகுதியில் மகாராஜா துணிக்கடையை திறந்தால் “மக்கள் போராட்டம் வெடிக்கும்” எச்சரிக்கும் தஞ்சை ஆர்.ஆர் நகர் பகுதி மக்கள்…

0

தஞ்சையில் புகழ்பெற்ற துணிக் கடைகளில் முதலாவது எது என்றால் அது தஞ்சை மகாராஜா துணிக்கடையை தான் சொல்வார்கள். ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை தஞ்சை மக்களை வைத்து பல கோடி சம்பாதித்த பெருமை இந்த மகாராஜா நிறுவனத்தை சாரும். இந்நிலையில் மகாராஜா நிறுவனத்தின் மற்றொரு கிளை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள R.R. நகரில் திறப்பதற்கு நிறுவனம் தயாராகி வருகிறது. இந்நிலையில் அந்த கடையை திறக்க கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி கமிஷனரையும் சந்தித்து மனு கொடுத்திருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.


என்ன நடந்தது
,ஏன் அந்த துணிக்கடையை திறக்க கூடாது என்று மக்கள் சொல்கிறார்கள் என்று அப்பகுதியைச் சார்ந்த மக்களிடம் பேசினோம்”

வெளியூரிலிருந்து தஞ்சையில் துணி கடை திறப்பதை விட மகாராஜா நிறுவனம் திறப்பதை நாங்கள் வரவேற்கிறோம் ஆனால் தற்போது அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் முறையான கட்டுமான வசதியும் முறையான பார்க்கிங் வசதியும் இல்லாமல் மக்கள் குடியிருக்கும் பகுதியை சேர்த்து இந்த மகாராஜா நிறுவனம் கட்டப்பட்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் மஹாராஜா நிறுவனம் கட்டப்பட்டு வந்ததை நாங்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஏன் திடீரென எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றால் இவர்கள் கட்டப்பட்டிருந்த கட்டிடத்திற்கு பின்புறம் கேசவன் என்பவரின் வீட்டை விலைக்கு வாங்கினார்கள். அதேபோல் அங்கு இருக்கும் இஸ்லாமியர் ஒருவரின் வீட்டை லீசுக்கு வாங்கி அந்த புது வீட்டை உடைத்து அதில் கொண்டு வந்து ராட்சத ஜெனரேட்டர்களை வைக்க திட்டம் தீட்டி வருகிறார்கள். அந்த ராட்சத ஜெனரேட்டர்களை அங்கு வைத்தால் கண்டிப்பாக இங்கு குடியிருக்கும் எங்கள் மக்களுக்கு பிரச்சினை உண்டாகும் நிம்மதியான உறக்கம் இருக்காது .இங்கு இருப்பவர்களின் பெரும்பாலானவர்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் வயது முதிர்ந்த இவர்களை வைத்துக்கொண்டு நாங்கள் எப்படி இந்த சத்தத்தில் வாழ முடியும் அதனால் தான் தற்போது இந்த எதிர்ப்பை தெரிவிக்கிறோம். மேலும் இந்த பகுதியில் மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருக்கும் பகுதியாக இருக்கிறது. இங்கு மகாராஜா நிறுவனம் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் மக்கள் குடியிருக்கும் பகுதி வணிக பகுதி யாக மாறிவிடும் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாது. போக்குவரத்து நெரிசலால் விபத்துக்கள் ஏற்படும் என பல்வேறு சிக்கல்கள் இந்த பகுதியில் இருக்கிறது. இதனை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் நடத்த அனுமதிக்க வேண்டாம் என்பதை கூறிவிட்டோம்.

மேலும் கட்டிடம் approval வழங்குவதிலும் பிரச்சனை இருந்து வருகிறது. இந்த கட்டிடத்திற்கு இதுவரை மின்சார இணைப்பையும் மின்சார வாரியம் கொடுக்கவில்லை. கார் பார்க்கிங் வசதியும் முறையாக இல்லை. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் இவர்கள் மீது அதிருப்தியில் இருப்பதும் உண்மை. .மேலும் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் எங்களுடைய குறைகளை கலைந்து மக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இந்த திறப்பு விழா பணியை மேற்கொண்டால் சந்தோசம் தான். ஆனால் விதிமுறைகளை மீறி மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வியாபார நோக்கில் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகமும் நடந்து கொண்டால் இங்கு குடியிருக்கும் அனைத்து மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று முடித்துக் கொண்டனர் பகுதி மக்கள்.
அரசு அதிகாரிகளிடம் பேசினோம் மக்களின் பிரச்சினைகளை சரி செய்யாமல் இந்த திறப்பு விழா நடக்காது என்பதையும் உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறோம் என்று முடித்தனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் விஷயத்தில் அரசு அதிகாரிகளின் பணி என்னவென்று..?

மக்களின் கையெழுத்துடன் கூடிய புகார் கடிதம்

செய்தி.. தமிழ்ச்செல்வன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here