Wednesday, November 5, 2025
No menu items!
HomeUncategorizedஉலக புகழ் பெற்ற கங்கைகொண்ட சோழபுர அன்னாபிஷேக விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

உலக புகழ் பெற்ற கங்கைகொண்ட சோழபுர அன்னாபிஷேக விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உலக புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேக விழா நவம்பர் 5ந்தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. 41- வது அன்னாபிஷேக விழா துவக்கமானது.

கடந்த 3-ம் தேதி கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பிரகதீஸ்வரர் மற்றும் அம்பாளுக்கு வாசனை திரவியங்கள், பழங்கள் மற்றும் மலர்களால் மகா அபிஷேகங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வான அன்னாபிஷேக விழா காலை முதல் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. ஆசியாவிலேயே மிகப் பெரிய லிங்கமாக கருதக் கூடிய பிரகதீஸ்வர பெருமானுக்கு மாலை 100 மூட்டை அரிசியால் சாதம் வடிக்கபட்டு, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு லிங்கத்தின் மீது அன்னாபிஷே அலங்காரம் செய்த பின்னர் மகா தீபாரதனை காட்டப்பட்டவுடன் அன்ன அலங்காரத்தில் பிரகதீஸ்வரர்பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அன்னாபிஷேக விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வெளிநாடு சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அது மட்டுமின்றி அன்னாபிஷேக சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மடம், இந்து சமய அறநிலையத் துறையினர், மற்றும் கங்கை கொண்ட சோழபுர மேம்பாட்டு குழுவினர் ஆகியோர்கள் செய்து இருந்தனர்.

எம்.எஸ்.மதுக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Exit mobile version