உனக்கு எச்.ஐ.வி இருக்குப்பா.’ தஞ்சை வாசன் ஐ-கேரின்’ அலட்சியத்தால் ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த அவலம்.. இப்படியுமா நடக்கிறது வாசன்-ஐ கேரில்.?

0

கண்பார்வை சிகிச்சைக்குச் சென்ற இடத்தில் உங்களுக்கு எச் ஐ வி நோய் இருக்கிறது அதனால் இங்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டாம் என தஞ்சை வாசன் ஐ கேர் நிறுவனம் சொன்ன. பொய்யான தகவலால் ஒரு குடும்பமே அதிர்ந்து நிற்கிறது , இதனைப் பற்றிய செய்தி நம் காதுகளுக்கு வர விசாரிக்க ஆரம்பித்தோம்

நேற்றைய தினம் தஞ்சை கரந்தை பகுதியைச் சார்ந்த ஒருவர் கண் சிகிச்சைக்காகத் தஞ்சை ரயிலடி அருகே உள்ள வாசன் ஐ கேர் நிறுவனத்திற்குச் சென்றுள்ளார் அங்குக் கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்லி அவரிடம் அனைத்துவிதமான பரிசோதனையும் செய்துள்ளனர் வாசன் ஐ கேர் நிறுவனம் .

தஞ்சை வாசன் ஐ கேர் மருத்துவமனை


அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்காக ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர் சரி எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறிவிட்டார் ரத்தப் பரிசோதனையும் செய்துள்ளனர் .

இறுதியில் பரிசோதனை செய்ததில் உங்களுக்கு எய்ட்ஸ் (எச்ஐவி) தொற்று இருக்கிறது. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் உங்களுக்குச் சிகிச்சை செய்ய முடியாது எனவும் வேறு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளவும் என திருப்பி அனுப்பி உள்ளனர்.

ஆர்த்தி ஸ்கேன் ரிப்போர்ட்

அதனைப் பார்த்து பயந்துபோன அந்த நபர் இதற்கான வாய்ப்பு கிடையவே கிடையாது எப்படி நமக்கு இந்த நோய் வந்தது என்று புலம்ப ஆரம்பித்து ஒட்டுமொத்த குடும்பமும் கண்ணீரில் தத்தளித்தது அவரது குடும்பத்தில் மாறி மாறி ஒருவரை தேற்றி கொண்டு இந்த மருத்துவமனை வேண்டாம் வேறு மருத்துவமனைக்குச் செல்வோம் என உறவினர் கூறியதன் பேரில் உடனடியாக பக்கத்தில் இருக்கும் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்குச் சென்று அவர் மீண்டும் இரத்தப் பரிசோதனை எடுத்துள்ளார் அந்த பரிசோதனையில் அவருக்கு அப்படி ஒரு நோய்க்கான அறிகுறியே கிடையாது தவறுதலாகக் கொடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனை முடிவு என்று அங்குள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர் பற்றாக்குறைக்கு இன்னொரு மருத்துவமனையிலும் ரத்தப்பரிசோதனை எடுத்துள்ளார் அங்கும் இவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் மட்டுமே வந்தது இதனை கொண்டு வந்து மீண்டும் வாசன் ஐ கேர் மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்கும் போது தவறுதலாக மாறிவிட்டது கோபித்துக் கொள்ளவேண்டாம் என்று அலட்சியமாகக் கூறியுள்ளனர் இதில் மனம் நொந்து போன குடும்பம் செய்வதறியாது தற்போது தவித்துக் கொண்டு இருக்கிறது.

HIV.வைரஸ்

மருத்துவரின் அலட்சியத்தால் ஒருவரின் வாழ்க்கையை இம்மருத்துவமனை கேள்விக்குறியாக்கி இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது, இது போல் போலியான ரிப்போட்டை

இளகிய மனம் படைத்தவர் யாராவது ஒருவருக்குக் கொடுத்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் வாழ்க்கையை முடித்து இருப்பார்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது இனியாவது வாசன் ஐ கேர் நிறுவனம் அதற்கான தேர்வு செய்யப்பட்ட நபர்களை வைத்து முறையான டெஸ்ட் எடுத்து மக்களுக்கு மருத்துவ சேவை செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்க

வாசன் ஐ கேர் அளித்த ரிப்போர்ட்

இதனை பற்றிக் கேட்பதற்கு வாசன் ஜ கேர் மேலாளர் செந்திலை தொடர்பு கொண்டோம் எங்களுடைய தவறு கிடையாது அந்த டெஸ்ட் எடுக்கும் கார்டில் ஏதோ தவறு இருக்கிறது அதற்காக நாங்கள் அவரை கோபித்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டோம் அதேபோல அந்தடெஸ்ட் எடுத்த லேப் டெக்னீஷியன் வேலை விட்டு பிரித்தியை வேலையை விட்டு எடுத்து விட்டோம் மற்றபடிச் சம்பந்தப்பட்டுள்ள நபர்களிடம் மன்னிப்பும் கேட்டு விட்டோம் என்று சர்வ சாதாரணமாக முடித்துக்கொண்டனர்.

இனியாவது பொறுப்புடன் நடந்து கொள்ளுமா வாசன் ஐ கேர் நிறுவனம்..

செய்தி..கார்த்திக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here