உச்சம் தொட்டது கேஸ் சிலிண்டர் விலை.. ஏழை, நடுத்த மக்கள் அதிர்ச்சி!

0

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.

இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. இந்த வகையில், காஸ் சிலிண்டருக்கான விலையை உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் காரணமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உயர்த்தாமல் ஒரே நிலையில் வைத்திருந்தனர். தேர்தல் முடிந்ததும், திடீரென மார்ச் 22ம் தேதி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் ரூ.965.50 என விலை உயர்ந்தது. இந்த விலையில் கடந்த மாதம் (ஏப்ரல்) மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் இந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை இரு முறை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்த மே 7ம் தேதி, ரூ.50 அதிகரித்து 1,015ரூபாய்க்கு விற்பனையான சிலிண்டர், இன்று ரூ.3 அதிகரித்து ரூ.1,018.50க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் ஒரே ஆண்டில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 193 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதேபோல வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த 7ம் தேதி ரூ.102.50 அதிகரித்து ரூ.2,499 என விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.8 உயர்ந்து ரூ.2,507 என விற்பனை செய்யப்படுகிறது.விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நேரத்தில் சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here