ஈசிஆர் பண்ணை வீட்டில் குஷாலா… , 11 பெண்கள், 15 ஆண்களுடன் சிக்கிய நடிகை கவிதா ஸ்ரீ

0

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

1994ம் ஆண்டு வெளிவந்த காதலன் படத்தில் முரட்டு போலீஸ் அதிகாரியாக நடித்தவர் துணை நடிகை கவிதாஸ்ரீ. சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள எல்.ஆர்.பார்ம் என்ற தனியார் சொகுசு விடுதியை சினிமா சூட்டிங்கிற்கு என 2 மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்த துணை நடிகை கவிதா ஸ்ரீ அதில் சொகுசு விருந்து நடத்தி வந்துள்ளார்.

கவிதா ஸ்ரீ-யின் பிரைவேட் பார்ட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அவரது கூகுள் பே அக்கவுண்ட்டிற்கு 1,599 ரூபாயை நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் பெண்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து பண்ணை வீட்டை சுற்றி வளைத்த போலீசார் பார்டியில் ஈடுபட்ட துணை நடிகை கவிதா ஸ்ரீ, 11 பெண்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட 15 ஆண்களை மடக்கிப் பிடித்தனர். மேலும் பண்ணை வீட்டிற்கு சீல் வைத்த போலீசார் கொரோனா ஊரடங்கில் பிரைவேட்டாக பார்ட்டி நடத்திய துணை நடிகை கவிதா ஸ்ரீ உள்பட பிடிபட்ட 15 ஆண்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் நடிகை கவிதாஸ்ரீயை ஜாமீனில் விடுவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here