`இந்திய மக்களிடம் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறோம்!- இம்ரான்கான்

0

இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாகி வருகிறது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றின் ஆபத்தான அலையை எதிர்த்துப் போராடும் இந்திய மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகிறேன். நமது சுற்றுப்புறத்திலும் உலகிலும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்கின்றோம். மனிதகுலத்தை எதிர்கொள்ளும் இந்த உலகளாவிய சவாலை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here