`இந்தியாவுக்கு போகாதீங்க!’- விமான சேவையை ரத்து செய்தது ஹாங்காங்

0

கொரோனா 2வது அலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில் நாளை முதல் வரும் மே 3ம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களுக்கான சேவையை ரத்து செய்துள்ளது ஹாங்காங் அரசு.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அண்மை காலமாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருந்த இந்தியா தற்போது 2வது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் வரும் மே 3ம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டுகளுடனான விமான சேவைகளையும் ஹாங்காங் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, மும்பை – ஹாங்காங் இடையேயான விஸ்தரா விமானங்களை மே 2 ஆம் தேதி வரை ஹாங்காங் அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்திருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here