ஆ.ராசா நாவடக்கத்துடன் பேச வேண்டும்… மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கடும் கண்டனம்…

0

இன்று மாலை மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்று கட்சியினர் 300க்கு மேற்பட்டோர் தங்களை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அதன் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.

அதற்க்கான நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் K S திருமண மஹாலில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில மாவட்ட மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கில்லி பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார் முகமது நசீர் நன்றி உரையாற்றினார்.


நிகழ்ச்சி முடிவில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் செய்தியாளர்களை சந்தித்தார் அதில் திமுகவின் ஆ ராசா பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு. இத்தகைய பேச்சை திமுக தலைமை கண்டிக்க வேண்டும். இது இந்து மக்களை இழிவுபடுத்தும் பேச்சாக அமைந்துள்ளது நாகரிகம் மற்ற இத்தகைய பேச்சை எங்கள் கழகத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் இனி நாவடக்கத்துடன் பேச வேண்டும். மேலும் திமுக அரசின் வாக்குறுதி

பழைய ஓய்வூதிய திட்டம் ,விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் மட்டுமல்லாமல் அனைத்து வங்கிகளிலும் வாங்கிய கடன் தள்ளுபடி,குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம், மாணவர்கள் கல்வி கடன் ரத்து போன்ற செயல்படுத்த முடியாத வாக்குறுதிகள் மற்றும் மின்கட்டண உயர்வை திசை திருப்பும் முயற்சியே ஆ.ராசா பேச்சி.

அதிமுக கட்சி விவகாரம் பற்றி கேட்டதுக்கு எதிர் வரும் தேர்தலுக்குள் உட்கட்சி பிளவுகளை மறந்து ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார் எம்ஜிஆர் ஜெயலலிதா தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்று முடித்தார்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here