`ஆபாச பட தயாரிப்புக்கும். எனது கணவருக்கும் தொடர்பில்லை!’- போலீஸிடம் நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்

0

“ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் ராஜ்குந்த்ரா அப்பாவி” என்று நடிகை ஷில்பா ஷெட்டி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் ’குஷி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். பிரபுதேவாவுடன் ’மிஸ்டர் ரோமியோ’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஆபாசப் படங்களை தயாரித்து விற்றது தொடர்பாக, ராஜ் குந்த்ரா சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். ஆபாசப் படங்களை தயாரித்து விற்பனை செய்தது, அதற்காக ஷாட்ஷாட் என்ற செயலியை உருவாக்கியதில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்ததை அடுத்து மும்பை போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் சில நடிகைகள், ராஜ் குந்த்ரா தங்களை மிரட்டி அந்தப் படங்களில் நடிக்க வைத்ததாக புகார் கூறியிருப்பது இன்னும் பரபரப்பாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்டனர். இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவின் மைத்துனர் பிரதீப் பக்‌ஷிதான் அந்த ஆப் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொண்டார் என்றும் இதற்கும் ராஜ் குந்த்ராவுக்கு தொடர் பில்லை, அவர் அப்பாவி என்றும் ஷில்பா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு கிளர்ச்சியூட்டக் கூடிய படங்களுக்கும் (erotica) ஆபாசப் படங்களுக்கும் (pornography) வித்தியாசம் இருக்கிறது என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதுபோன்ற வீடியோக்கள், ஒடிடி தளங்களில் அதிகம் காணப்படுவதாகவும் ஷில்பா தெரிவித்துள்ளார். இந்த ஹாட்ஷாட் ஆப், ஆபாச வீடியோக்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஆபாச வீடியோ தயாரிப்புகளில் ஈடுபடவில்லை என்றும் அவர் போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here