மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போச்சம்பள்ளி வட்ட குழு சார்பாக வீட்டுமனை பட்டா இல்லாத ஏழை எளிய ஆதி திராவிடர் மக்களுக்கு பட்டா கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போச்சம்பள்ளி வட்டாட்சியரையும், மாவட்ட ஆட்சியரையும் கண்டித்து ஜனவரி 10 அன்று கட்சியின் வட்ட செயலாளர் கே.சாமு அவர்களின் தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
போராட்ட குழுவிற்கும் போச்சம்பள்ளி வட்டாட்சியருக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சு வார்த்தை உடன்பாட்டின் அடிப்படையில் முதற்கட்டமாக ஏழு பயனாளிகளுக்கு போராட்ட களத்திலேயே பட்டா வழங்குவது என முடிவு எடுத்து போச்சம்பள்ளி வட்டாட்சியர் ஏழு பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார். அதன் பிறகு மற்ற பயனாளிகளுக்கு ஒரு மாத காலத்திற்குள் அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதனை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
M. நந்தகுமார்
நிருபர் கிருஷ்ணகிரி