அரியலூர் ஆட்சியரின் பெயரை தவறாகப் பயன்படுத்தும் கயவர்கள்.. போலீஸ் வலையில் சிக்குவார்களா.?

0

அரியலூர் கலெக்டர் பெயரில் போலி குறுஞ்செய்தி உலவியதால் பரபரப்பு.

அரியலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பெ.ரமணசரஸ்வதி ஆலோசனையின் பெயரில் பி ஆர் ஓ அலுவலகம் ஒரு செய்தியை பத்திரிக்கை மற்றும் ஊடகத்திற்கும் பொதுமக்களுக்கும் வெளியிட்டுள்ளது.

அதில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார் இந்நிலையில், முகம் தெரியாத நபர்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் புகைப்படத்தை முகப்புத்தோற்றமாக வைத்த

7061656848 மற்றும் 9390453112 ஆகிய தொலைபேசி எண்களிலிருந்து வாட்ஸ்அப் கால் (Whatsapp Call) மூலமாகவும், வாட்ஸ்அப் மெசேஜ் (Whatsapp Message) மூலமாகவும் அரசு உயர் அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெயரில் பரிசுப் பொருட்களை கேட்டு, வாட்ஸ்அப்; குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொள்வதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளது.

எனவே இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் நம்பவேண்டாம் என்றும் இது போல் பரிசுப்பொருட்கள் கேட்டு, இனி தகவல் வந்தால் அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதே அதன் சாரம்.

இப்போது அரசு்அலுவலகம் தாண்டி பொதுமக்களிடம் இந்த போலி குறுஞ்செய்தி அனுப்பிய நபர் யாராய்? இருக்கும் மாவட்ட ஆட்சியர் பேரில் விளையாடும் அந்த முகமூடி மனிதன் ஆணா? பெண்ணா? என்ற கேள்விகளோடு பரபரப்பும் தொற்றியுள்ளது.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடிக்கும் என்ற கிராம பழமொழிக்கேற்ப அப்பாவி பொதுமக்களிடம் தொடங்கிய இந்த போலி கணக்கு போர்ஃஜரிகள் தற்போது உயர் அதிகாரி வரை ஊடுருவியுள்ளது அதிர்ச்சியாய் தான் இருக்கிறது பூனைக்கு மணிக்கட்டப் போவது யார்?

செய்தி.. எம்.எஸ். மதுக்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here