அரிவாளுடன் புகுந்த கும்பல்… 5 பேரை கட்டிப்போட்ட கொள்ளையர்கள்… 250 பவுன் நகைகளுடன் காரில் எஸ்கேப்

0

சென்னையில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 5 பேரை காட்டிப்போட்டுவிட்டு 250 பவுன் நகைகளை திருட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திநகர் சாரதாம்பாள் தெருவில் வசித்து வரும் நூரில்ஹக் (71) என்பவர் துபாயில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஆயிஷா. இந்த தம்பதி, மனைவியின் அக்கா மகன் முஸ்தபா, பேரன் மொய்தீன் ஆகியோருடன் வசித்து வந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், நேற்று மாலை நூரில்ஹக் வீட்டிற்கு புகுந்த கும்பல் ஒன்று, அரிவாளை காட்டி ஓட்டுநர் அப்பாஸ், நூரில்ஹக், ஆயிஷா, உறவினர் மொய்தீன் ஆகியோரை கட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்த 250 சவரன் தங்க நகை, 1 லட்ச ரூபாய் பணம், 60 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டில் இருந்த ஹோண்டாசிட்டி காரை திருடிக் கொண்டு உறவினர் முஸ்தபாவை அந்த கும்பல் கடத்தி சென்று தி.நகரில் உள்ள தனியார் துணிக்கடை வாசலில் இறக்கிவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து பாண்டிபஜார் காவல்துறையில் , நூரில்ஹக் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி சென்று விடுக்கப்பட்ட முஸ்தபாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here