தமிழ்நாட்டில் வரும் 2026 ல் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதையொட்டி தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் மக்கள் சந்திப்பு நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பாஜக சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அக் 25 ந்தேதி நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது:
பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வந்ததையடுத்து உலக அளவில் இந்த பகுதி பேசப்படுகிறது. திமுக ஆட்சியில் மக்கள் பெரும் துன்பத்தை அடைந்து வருகின்றனர்.அரியலூர் மாவட்டத்தில் ஒரு சிட்கோ கூட ஏன் ? கொண்டுவரப்படவில்லை. நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை ஜெயங்கொண்டத்தில் தண்ணீர் பிரச்சினை சாக்கடை தண்ணீர் கலந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நகராட்சிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.

தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அனைத்தையும் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்படாததால் நெல் தேங்கி கிடக்கிறது. நிகழாண்டு டெல்டா பகுதிகளில் 6.30 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என கூறிய முதல்வர் ஸ்டாலின், உரிய கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தவில்லை. அதனால் தான் நெல் தேங்கும் நிலை ஏற்பட்டது. திருமாவளவன் சமூக நீதி குறித்து பேசுகிறார். இவர் கூட்டணியில் உள்ளோம் என அடிக்கடி கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது. இங்கு எஸ்சிஎஸ்டி தெருக்களில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லை.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது பாஜக. தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனை முப்பை ஆளுநராக பாஜக நியமித்துள்ளது. 25 சக்தி வாய்ந்த நாடுகளில் 3-வது இடத்தில் இந்தியா உள்ளது என ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. புதிய பாராளுமன்றம் கட்டிடம் கட்டப்பட்டது. திருக்குறளை 58 மொழிகளில் வெளியிட்டது மோடி அரசு. அரியலூர் மாவட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் 1.50 லட்சம் பேருக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வழங்கப்படுகிறது. 35 லட்சம் பேருக்கு பயிர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 8 மலிவு விலை மருந்தகம். ஆயுள் காப்பீடு திட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு காப்பீடு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வீடு திட்டத்தில் 2,769 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.80 லிருந்து ரூ.83 ஆக உயர்த்தியுள்ளது. பருத்திக்கு ரூ.102 உயர்த்தி தரப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ரூ.22 கோடி மதிப்பில் புதிய நீதிமன்றம், புதிய கலைக்கல்லூரி, ரூ.11 கோடி மருத்துவமனை கட்டிடம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கொள்ளிடத்தில் தடுப்பணைக்கு நிதி ஒதுக்கியது. ரூ.110 கோடியில் திருமானூர் கொள்ளிடத்தில் புதிய பாலம், ரூ.300 கோடி செருப்பு தொழிற்சாலை ஆகியவற்றுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டநிலையில் அனைத்தையும் திமுக ரத்து செய்துவிட்டது
பாஜ க அதிமுக வலுவான கூட்டணி மோடி 4 வது முறையும் பிரதமர் ஆவார். என்றார்.
கூட்டத்தில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் பரமேஸ்வரி, அதிமுக மாவட்டச் செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
எம்.எஸ்.மதுக்குமார்.

