அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவு!- மாணவர்களுக்கு `செக்’ வைத்தது உயர்நீதிமன்றம்

0

அரியர் தேர்வுகளை 8 வாரத்தில் ஆன்லைனில் நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, 12ம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து பாலகுருசாமி, ராம்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட மாட்டாது என்றும் தேர்வுக்கான தேதியை யுஜிசியுடன் ஆலோசித்து பல்கலைக்கழகங்கள் அறிவிக்கும் என்றும் தமிழக அரசு பதில் அளித்தது.

இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அரியர் தேர்வுகளை 8 வாரத்தில் ஆன்லைனில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, தேர்வுகள் நடத்தப்பட்டது குறித்த அறிக்கையை ஜூலை 2வது வாரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here