அரிசி கடை பெயரில் போலி மதுபானத்தை உருவாக்கிய டீமை பொறிவைத்து பிடித்த டி.ஐ.ஜி. ஸ்பெஷல் டீம்… பின்னணியில் அரசியல் தலையீடா.?

0

நேற்றைய தினம் போலி மதுபானம் தயாரித்த கும்பல் ஒன்றை தஞ்சை DIG ஸ்பெஷல் டீம் பிடித்தது இன்று தஞ்சையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இச்சம்பவத்தில் என்ன நடந்தது எப்படி பொறி வைத்து இந்த போலி மதுபானம் தயாரித்த கும்பலை பிடித்தனர் என்ற விசாரணையில் இறங்கினோம்

காவல்துறை வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம் “தஞ்சையில் போலி மதுபான தயாரிப்பு நடக்கிறது என்ற தகவல் எங்கள் மேலதிகாரிகளுக்கு வர அவர்கள் உத்தரவின் பேரில் விசாரணையில் இறங்கினோம்.

மருத்துவக்கல்லூரியைச்சார்ந்த ஆகிய விஜய் கமல் நாலு கால் மண்டபத்தை சார்ந்த ஹரிபிரசாத் மாரனேரி சார்ந்த பிரபாகரன் உள்ளிட்ட 3 பேரும் பேரும் ஒன்றிணைந்து மருத்துவக் கல்லூரியில் ஒரு தனி விடுதி எடுத்து அங்கு மதுபானங்களில் தண்ணீர் கலந்தும் பாண்டிச்சேரியிலிருந்து மதுபானங்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து தஞ்சையில் பாட்டில்கள் தயாரித்து ஸ்டிக்கர், லேபிள் , மூடி போன்றவைகளை உதிரியாக வாங்கி அதனை ஒருங்கிணைத்து ஒரிஜினல் போல மதுபான பாட்டில்களை உருவாக்கியுள்ளனர் அதனை கொண்டு போய் அறிமுகம் உள்ள டாஸ்மாக்கில் விற்றுள்ளனர். தற்போது அந்த கும்பலை காவல்துறை பொறிவைத்துப் பிடித்து அதில் முதல் குற்றவாளி விஜய் கமல் நீண்ட காலமாக இதுபோன்ற தொழில் செய்து வருவதாகவும் அவர் இதற்கு முன்பு தண்ணீர் பாட்டில் போடும் வேலையை செய்துள்ளவர் என்றும் அரிசி கடையை நடத்தி வருபவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது அரிசிக்கடை வைக்கப்போவதாக தான் மருத்துவ கல்லூரி

பிடிபட்ட பாட்டில்கள்

பகுதியில் ஒரு தனி வீட்டையும் வாடகைக்கு எடுத்துள்ளார்.தற்போது அந்த கும்பலை காவல்துறை பிடித்து இவர்கள் போலி மதுபானங்களை யார் யார் மூலம் சப்ளை செய்தனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் , மதுவை உருவாக்க என்ன பார்முலாவை பயன்படுத்தினார்கள் . இது எவ்வளவு காலம் நடந்தது டாஸ்மாக்கில் இதனை வாங்கியது யார் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கும்பலை பொறிவைத்து பிடித்த உதவி ஆய்வாளர் மகேந்திரனிடம் கேட்டதற்கு விசாரித்துக் கொண்டிருக்கிறோம் விசாரணை முடிவில் முழு தகவல்கள் தெரியவரும் என்றார் .அதேபோல இந்த தகவலில் இந்த கும்பலில் சில அரசியல்வாதிகள் தொடர்புடையதாகவும் தஞ்சையில் பேச்சு அடிபட்டு வருகிறது அதனையும் காவல்துறை கண்டுபிடித்தால் நல்லது. காவல் துறையின் விசாரணையை பொறுத்திருந்து பார்ப்போம்

உதவி ஆய்வாளர் மகேந்திரன்
கைதான விஜய் கமல்
கைதான ஹரி பிரசாத்
கைதான பிரபாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here