கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் தேர்த்திருவிழா மார்ச் 3 அன்று ஓசூரில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது. தமிழக,ஆந்திர, கர்நாடக மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது இந்த ஆன்மிக நிகழ்வின் ஒரு பகுதியாக அரசியல் டைம்ஸ் வார இதழின் ஓசூர் மாநகர கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழரசம் வழங்கும் நிகழ்ச்சி நமது கிளை அலுவலகம் அருகே பாகலூர் சாலையில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு மோர் மற்றும் பழரசம் நமது அரசியல் டைம்ஸ் வார இதழின் பொறுப்பாளர்கள், நிருபர்கள், நண்பர்களால் விநியோகிக்கப்பட்டது, இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர பொறுப்பாளர்கள் உமாசங்கர்,

பவுல்ட்ரி சோலைராஜ், கிருபானந்தம், குருசாமி, இடிமுழக்கம் சந்துரு, ஸ்கிராப் மஞ்சு, நெய் சத்யநாதன், மை காபி வெங்கடேசன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு கேசிசி நகர் கார்த்திக், தொழிலதிபர் பிரகாஷ் ரெட்டி, அமரேஷ் ரெட்டி, தில்லை நகர் ராஜேஷ், செந்தில்நாதன், பழனி, சாமன், கோவிந்தராஜ் ஐயா, சரத், அரசியல் டைம்ஸ் வார இதழின் இணை ஆசிரியர் ஜி.பி.மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


