கிருஷ்ணகிரி மாவட்ட அரசு விளையாட்டு மைதானத்தில் அன்பு குளோபல் ஃபேமிலி சார்பாக 2025 புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவு திறன் போட்டிகள் ஜனவரி 11 அன்று காலை 10 மணிக்கு துவங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது. நிகழ்வை முனைவர் கீதா அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். குழந்தைகளின் தனி திறனை வெளி கொண்டு வரும் நோக்கில் நடைபெற்ற நிகழ்வில் பேச்சு போட்டி, நடனம், சதுரங்க போட்டி, யோகா, ஓவிய போட்டி உள்ளிட்ட 7 போட்டிகள் நடைபெற்றது.
இதில் கிருஷ்ணகிரி மட்டும் அல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். சதுரங்க போட்டிக்கு ஃபேஸ் டூ ஃபேஸ் செஸ் அகாடமி நிறுவனர் நாகராஜ், நடன போட்டியில் பிரதக்க்ஷாலயா நடன பள்ளியில் இருந்து வினோத் குமார், அகிலா ஆகியோர் நடுவர்களாகவும் செயல்பட்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக அன்பு குளோபல் ஃபேமிலி நிறுவனர் உஷா அன்பு அவர்கள் மாணவர்களை பாராட்டி நன்றியுரையாற்றினார்.
M.நந்தகுமார்
நிருபர் கிருஷ்ணகிரி