அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தினர் சாலைமறியல்..!!

0

இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் அலுவலகங்கள் தமிழ்நாடு மாநில தலைமையகம் உட்பட மாநில நிர்வாகிகளின் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பு( NIA) தற்போது சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் பாப்புல ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் ஓ எம் ஏ சலாம் உட்பட பல்வேறு தலைவர்களை கைது செய்திருக்கும் தேசிய புலனாய்வு முகமையும் மத்திய அரசையும் கண்டித்து அதிரையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் :

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மக்கள் விரோத செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் அனைவர்களையும் அச்சுறுத்த தேசிய புலனாய்வு அமைப்பு,
அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி அச்சுறுத்த நினைக்கின்றது. மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்- ஐ அச்சுறுத்தவோ முடக்கவோ முடியாது. பாப்புலர் ஃப்ரண்ட் மீது வஞ்சகத்தோடு செயல்படும் பாஜக – வையும் அத்துமீறி செயல்படும் தேசிய புலனாய்வு அமைப்பை ( NIA ) கண்டித்தும் மாபெரும் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் இன்று காலை 11:30 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது இதில் பாப்புலர் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் தாங்கினார் , எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது புகாரி அவர்கள் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் அகமது ஹாஜா மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்த சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து சாராமண்டபத்தில் வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here